அமிதாப்பச்சனை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா!

823

அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டுவிட்டரில், “எனது தந்தை, நான் இருவரும் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தோம்.

இலேசான அறிகுறிகளைக் கொண்ட நாங்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.


எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அனைவரையும் பீதியடையாமல் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.