அமெரிக்காவில் 6 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய 19 வயது இளைஞன்!

832

அமெரிக்காவில் 6 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Corbin Guy Dunkel என்ற 19 வயது இளைஞன் தன் மீதான குற்றத்தை ஒப்பு கொண்ட நிலையிலேயே இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் Dunkel 10 வயது சிறுமியிடம் ஆபாச வீடியோ காட்சியை காட்டியுள்ளார்.


பின்னர் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம், Dunkel தன் உடலில் தவறாக தொட்டதாக அழுதபடி கூறிய நிலையில் அதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக தாயார் கொடுத்த புகாரையடுத்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட Dunkel வாழ்நாள் பாலியல் குற்றவாளியாக அதற்குரிய பதிவேட்டில் கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.