அம்மா ஆனார் இனிய இருமலர்கள் ஆல்யா..! என்ன குழந்தை தெரியுமா?

979

இனிய இரு மலர்கள் சீரியலில் ஆலியா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷிகா சிங் ஷா, தற்போது வெளியிட்டுள்ள தன்னுடைய அழகிய குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

கும்கம் பாக்யா”, “இடது வலது இடது” மற்றும் “சசுரல் சிமர் கா” போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா சிங் ஷா. பொதுவாகவே நடிகர் நடிகைகளின் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும்.

அப்படியாகத்தான் நடிகை ஷிகா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்தனர்.


இந்நிலையில் நடிகை ஷிகா, அழகிய பெண் குழந்தைக்கு தற்போது தாயாகி இருக்கிறார். இதனையடுத்து முதன்முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, பேபி அலைனா உங்களது அன்பிற்காக நன்றி தெரிவிக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். இது மட்டுமில்லாமல் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

திருமணத்திற்குப் பின்பும் பிஸியாக சீரியலில் நடித்து வந்த இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான நபராக வலம் வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவர் நடித்த சீரியலின் தமிழ் ரீமேக்கான இனியஇருமலர்கள் சீரியலில் ஆலியா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷிகா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களாலும் வெகுவாக கவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.