ஆண்கள் உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் ? நீரிழிவு நோயாளிகள் அதிகம் மட்டன் சாப்பிடலாமா?

812

ஆட்டிறைச்சி…….

அசைவ உணவுகளிலேயே ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. இதனால் தான் அதிக மக்களால் சாப்பிடப்படுகின்றது. மட்டன் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

இதற்கு முக்கிய காரணம், ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஆட்டு இறைச்சியில் இவ்வளவு சத்துக்கள் உள்ளதென்றால், அதனை சாப்பிட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ஆட்டு இறைச்சி இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும். ஆட்டு இறைச்சி உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் .


விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், மட்டனை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும்.

மட்டன் சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

ஆட்டிறைச்சி பித்த நீரைக் கொண்டிருக்கிறது. இவை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால், அவர்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.

மட்டனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு ஏற்படுவதை மட்டன் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம். இனி வாரத்திற்கு ஒரு முறையாவது ஆட்டிறைச்சியை சாப்பிடுங்கள்.