கொரோனா ஊரடங்கு காரணமாக தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆன்லைன் கிளாஸ் நடக்கும் வீடுகளில் நடக்கும் அலப்பறைகளே தனி.
அண்மையில் ஒரு குழந்தைக்கு ஹோம்வொர்க் கொடுத்ததைச் செய்ய வில்லை என்று அம்மா மிரட்டுவது, அதற்கு அக்குழந்தை அழுதுகொண்டே நாளை செய்துவிடுகிறேன் எனச் சொல்லும் வீடியோ வைரலானது.
தற்போது பேரனுக்கான ஆன்லைன் கிளாஸில் பாட்டி கவனித்துக் குறிப்பு எடுக்கிறார். பேரன் பெஞ்சின் மறுபுறம் குனிந்துகொண்டு விளையாடுகிறான். இந்தப் படத்தைப் பலரும் பகிர்ந்த்கொண்டிருந்தார்கள்.
இந்த போட்டோ ஓர் ஓவியரின் கண்களில் பட்டிருக்கிறது. அந்தப் பேரன் என்ன செய்திருப்பான் என யோசித்திருக்கார் அல்லது என்ன செய்ய வேண்டும் என அந்தப் பேரன் ஆசைப்பட்டிருப்பான் என ஓவியர் சிந்திருக்கிறார்.
அதன் விளைவு ரொம்ப கிரியேட்டிவிட்டியான ஓர் ஓவியத்தை வரைந்திருக்கிறார். இப்போது வரை அந்த ஓவியர் யார் என்று தெரியவில்லை.
ஆனால், அந்த ஓவியம் ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டில் செம வைரலாகி வருகிறது.
ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் குட்டி குழந்தைகளின் கல்வி உலகமும் கனவு உலகமும் வேறு வேறாக இருப்பதை குறித்த உண்மையை விளக்கும் இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கும் ஓவியத்தை வரைந்தவருக்கும் பாராட்டுகள் . #onlineclasses pic.twitter.com/hwoPqckA50
— Arjun Saravanan (@ArjunSaravanan5) July 25, 2020