ஆயுதப்படை பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

300

சேலத்தில்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33), நாமக்கல் ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் விவாகரத்து பெற்றவர், ஈரோட்டில் பணிபுரியும் போது உடன் பணிபுரிந்த காவலர் சேகர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

சேகர் தற்போது நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பெண் காவலர் வைஷ்ணவி, திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இவர் நாமக்கல் கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், 28ம் தேதி, வாடகை வீட்டில் இருந்த வைஷ்ணவி, பூச்சி மருந்து (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ​​குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.