ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு சிறுமிகள்… விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்!!

848

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிறுமிகள் இருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பொலிசார் திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

தொடர் துஸ்பிரயோகங்களுக்கு இலக்கான சிறுமிகள் இருவரும், தங்களின் நிலை வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தாலையே தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.

இதில், ஒரு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கோட்டயம் மாவட்டம் முண்டக்கயம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், அனந்து, ராகுல் ராஜ் ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்புடைய இன்னொரு இளைஞரையும் பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


15 வயதேயான இரு சிறுமிகளின் மொபைல்போனை கைப்பற்றிய பொலிசார், அதில் இருந்த புகைப்படங்கள், மற்றும் சேட் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அந்த சிறுமிகளுக்கு சில சிறுவர்களுடன் தொடர்பு இருப்பதும், அத்துடன் இளைஞர்கள் சிலரின் தொலைபேசி உரையாடல்களும் பொலிசாருக்கு ஆதாரமாக சிக்கியது.

மேலும் மருத்துவ சோதனையில் இரு சிறுமிகளும் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 முதல் இந்த இரு சிறுமிகளும் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரு சிறுமிகளில் ஒருவரை முண்டக்கயம் மற்றும் அதன் அருகாமை பகுதியை சேர்ந்த நால்வர் தங்கள் குடியிருப்பு மற்றும் விடுதிகளில் வரவழைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

தற்போது இரு சிறுமிகளும் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களின் உடல் நிலை தேறி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.