ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜே ரம்யா.. வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

71

விஜே ரம்யா..

பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே ரம்யா. ஆரம்பத்தில் குண்டாக காணப்பட்ட ரம்யா, திருமணமாகி சில வருடத்தில் விவாகரத்து செய்திருந்தார். அதன்பின் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி, தற்போது ஒல்லியாக மாறி ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு 16 வயதிருக்கும் போது ஒருமுறை இரவுபகலாக ஷூட்டிங் நடந்தது. சரியான ஓய்வில்லை என்பதால் என் கண் சிவந்து போனது. அப்போது என்னை பார்த்த கேமரா மேன் என்னை கண்ணெல்லாம் சிவந்து இருக்கு, நைட் ஃபுல்லா கிளப்பிங்-ஆ என்றும் ஃபுல் சரக்கா, பீர் பெல்லி எல்லாம் தெரியுது என்று கேட்டார்.

அப்போது அவர் ஏன் அப்படி கேட்டார், அதற்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது. நான் குண்டாக இருப்பதை நினைத்து பீர் குடிப்பவள் என்றும் இரவு பார்ட்டி செய்பவர் என்றும் அவரே யூகித்து கொண்டிருக்கிறார்.


இரவு பகலாக ஓய்வில்லாமல் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று விஜே ரம்யா கூறியிருந்தார். தற்போது உடற்பயிற்சி செய்து படுஒல்லியாக மாறிப்போன புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)