இணையம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பணம் மோ சடி செய்யும் வெளிநாட்டவர்கள் நான்கு பேர், விசேட பொலிஸ் அ திரடி ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்துள்ளதாக வெளிநாட்டவர்களால் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த மோ சடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் நைஜீரிய நாட்டவர்கள் இருவரும் உகாண்டா நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்த 15 கடன் அட்டைகளை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.