இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! ஏலியன் ஸ்பான் என்று பீதியில் மக்கள்…!

1057

அடையாளம் தெரியாத வினோத உயிரினம் ஒன்றின் காணொளி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இந்த வீடியோவில் உள்ள விசித்திரமான தோற்றமுடைய உயிரினத்தைக் கொண்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் இந்த உயிரினத்திற்கு ஒரு குழாயிலிருந்து உணவு சாப்பிட வழங்கப்படுகிறது.

வீடியோவில் காணப்படும் இந்த உயிரினம் அதன் வாயில் சிறிய பற்கள் போலத் தோற்றமளிக்கும் வித்தியாசமான புள்ளிகளைக் கொண்டுள்ளது, சிறிய பின்னங்காலுடன், முன்னாள் மொட்டையான கைகளுடன் காணப்படுகிறது.


கண்கள் எதுவும் இல்லாமல் அடையாளமே தெரியாமல் காட்சியளிக்கிறது. இது நெட்ஃபிலிக்ஸில் வரும் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸ் இல் வரும் ‘டெமோகோர்கன்’ (Demogorgon) உயிரினம் போல காட்சியளிக்கிறது என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

இன்னும் சில மார்வெல் ரசிகர்கள் இது வெனோம் வில்லன் போல உள்ளது என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்துவிட்டு, இதன் பின்னணி என்ன என்ற ஆராய்ந்த பொது தான் உண்மை விளங்கியது.

உண்மையில் இது ஒரு பறவையின் குஞ்சு என்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு இதன் உண்மையான பெயர் என்ன என்று பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஆப்பிரிக்கன் சில்வர்பில் அல்லது கோல்டியன் ஃபிஞ்ச் அல்லது எஸ்ட்ரில்டிட் ஃபிஞ்ச் என்று அழைக்கப்படும் பறவையின் குஞ்சு என்பது உறுதியானது. குஞ்சில் பார்க்க விசித்திரமாக இருக்கும் பறவை வளர்த்தும் அழகான தோற்றத்தில் இருக்கிறது.

இந்த பறவைக்குஞ்சுகள் பிறந்தவுடன் இப்படி வினோதமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது, இன்னும் சிலர் இந்த பறவை குஞ்சை ‘ஏலியன் ஸ்பான்’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.