இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு கொரொனா, திரையுலகமே அதிர்ச்சி, அதிகாரப்பூர்வ தகவல் இதோ….!

985

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனை தெரியாதவர்கள் யாருமில்லை. ஒட்டு மொத்த திரையுலகமும் இவர் சொல் கேட்கும்.

ஏன் ரஜினிகாந்தே என் ரோல் மாடல் அமிதாப் பச்சன் தான் என்று சொல்வார், அந்த அளவிற்கு செல்வாக்கு உள்ள நடிகர்.

இவர் சமீபத்தில் கொஞ்சம் உடல்நலம் முடியாமல் இருந்துள்ளார், உடனே மருத்துவர்களிடம் டெஸ்ட் செய்து பார்த்துள்ளார்.

அதில் இவருக்கு கொரொனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதோடு அதை அவரே தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


மேலும், தன்னுடன் இருந்தவர்களையும் டெஸ்ட் செய்து பார்க்க சொல்லியுள்ளார்.

அதோடு குடும்பத்தினர் டெஸ்ட் ரிசல்ட்டிற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதை அறிந்த திரை நட்சத்திரங்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

மேலும், ரசிகர்கள் சீக்கிரம் நீங்கள் குணமாகி வர வேண்டும் என தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல் ஹாலிவுட்டின் முன்னணி தலைச்சிறந்த நடிகர் டாம் ஹாங்ஸ் கொரொனாவால் பதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.