இனி வாய்ப்பே இல்லையாம்… தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

81

இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்றும், பல கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது என்றும் கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள்.

கடந்த மாதம் நடிகர் ரஜினி இது குறித்து பேசியதாகவும், தனுஷ் சம்மதித்த நிலையில், தான் இப்போது சந்தோஷமாக இருப்பதாகவும், மீண்டும் தனுஷுடன் சேர்ந்து துன்ப வாழ்க்கை வாழ விருப்பமில்லை என்று ஐஸ்வர்யா கூறியதாகவும் தகவல் கசிகிறது.

இந்நிலையில், இந்த செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தற்போது விவாகரத்துக் கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2022ல் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தனர். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில், இந்த பிரிவு அவசியமா? மகன்களின் எதிர்காலத்தை யோசிங்க என்று ரஜினி தரப்பில் இருவரிடமும் சமாதானம் பேசி பலனில்லை.

இவர்கள் இருவரும் விவாகரத்துக் கோரிய மனு மீது விரைவில் விசாரணைத் தொடங்கப்பட இருக்கிறது. தனுஷை பிரிவது குறித்தான முடிவில் தான் தீர்க்கமாக இருப்பதாகவும்,


மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சமீபத்தில் ‘லால் சலாம்’ பட நிகழ்ச்சிகளில் மறைமுகமாக ஐஸ்வர்யா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. விவாகரத்துக்கு தனுஷ் நடிகைகளுடன் எல்லை மீறி பழகி வந்தது முதன்மையான காரணம் என்று கூறப்படுகிறது.