இன்றைய ராசிபலன் (01-08-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

902

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிட பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிலும் அமைதியாக இருப்பது இன்றைய நாளில் நல்லது நடக்க வழிவகுக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சரியான அமைப்பு இல்லாததால் மற்றவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்நோன்யம் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். தேவையற்ற நபர்களிடம் வீண் பேச்சு வார்த்தை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் ஓரளவு விலகும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் உண்டாகலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியிட பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். கடன்கள் குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல், வண்டி வாகனங்கள் மூலமாக விரயங்கள் ஏற்படலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும்.