இன்றைய ராசிபலன் (03.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

434

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். எதிர்பாராத பணவரவு பையை நிரப்பும். மனசு சந்தோஷமடையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆடம்பரப் பொருள் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் அதை சேமிப்பில் வைப்பது நன்மையை தரும். வியாபாரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த நல்ல காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடு இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளினால் மனது சந்தோஷம் அடையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த உடல் உபாதைகள் சரியாகும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுறுசுறுப்போடு செயல்பட்டால் பிரச்சனை கிடையாது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. ஆகவே கொஞ்சம் பண கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிருப்தியோடு அலுவலக வேலைகளை செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். முதலீடு செய்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்கணும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். எந்த ஒரு வேலையிலும் முழுசாக மனதை ஈடுபடுத்த முடியாது. ஓய்வு எடுப்பது நல்லது. தேவையற்ற சிந்தனைகள் மனதை குழப்பும். பழைய கதைகளை நினைத்து கூட பார்க்காதீர்கள். இன்றைய நாளை சரியாக நகர்த்தி செல்ல முயற்சிகள் மேற்கொண்டால் போதும். மூன்றாவது மனிதரை நம்ப வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக பழகுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இதனால் நல்ல பெயர் வாங்குவீர்கள். அலுவலகப் பணியில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யும்போது கவனம் இருக்கணும். பாட்ணரை முழுசாக நம்ப வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். அடுத்தவர்களிடம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கந்துவட்டிக்காரரிடம் போகாதீங்க. வங்கியில் கடன் வாங்குவது நல்லது. ஏதாவது புதிய முடிவு எடுப்பதாக இருந்தால் இன்று அனுபவ சாலைகளிடம் ஒரு ஆலோசனை பெறவும். நீங்களே தன்னிச்சையாக நின்று எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியை கொடுக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்‌‌. சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கும். வாழ்க்கை துணையால் மனது சந்தோஷம் அடையும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். வாழ்க்கை துணைக்கு பரிசு வாங்கி கொடுத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் முடிவு எடுப்பதில் பொறுமை தேவை. எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும். சொத்து பிரச்சனை இடுபடியாக அமையும். உடன் பிறந்தவர்களுடன் சண்டை வர வாய்ப்புள்ளது. உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலையில் ஈடுபாடு இருக்காது. ஆரோக்கியத்தில் சிலருக்கு பிரச்சனை வரவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்கள் வெளியூரில் தங்கி இருப்பவர்கள் அவர்களுடைய வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். அரசாங்கத்துக்கு புறமான காரியத்தில் ஈடுபடக் கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். வெளியூர் பயணம் அலைச்சலை கொடுக்கும். இருந்தாலும் பயணத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஜாக்கிரதையாக பயணம் மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கடன் பிரச்சினை குறையும்.