இன்றைய ராசிபலன் (04.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

507

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் உங்களுடைய கடின உழைப்பின் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வருமானத்தை இரட்டிப்பாக பெருக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுவீர்கள். அந்த முயற்சிகள் வெற்றியும் கொடுக்கும். மனது சந்தோஷம் பெறும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைக்கவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று பொது இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். என்ன வார்த்தைகளை பேசணும், என்ன வார்த்தைகளை பேசக்கூடாது, என்பதில் உஷாரா இருந்துக்கோங்க. தேவை இல்லாத வார்த்தைகளை பேசி வம்பை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று கூடுமானவரை நீங்கள் எல்லா இடத்திலும் மௌன விரதம் இருப்பது நல்லது. அலுவலகப் பணியில் பொறுமை தேவை. மேலதிகாரிகளை எதிர்த்துக் கொள்ளக் கூடாது. சொந்த தொழிலில் கொஞ்சம் அக்கறையோடு நடந்து கொண்டால், வரும் சின்ன சின்ன இழப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதிரிகளோடு போராடி தான் வெற்றிக்கான வேண்டும். நண்பர்கள் தானே என்று நினைத்தவர்கள் எல்லாம், இன்று எதிர்பக்கத்தில் நின்று உங்களோடு சண்டை போடுவாங்க. சமாளிக்க தெம்பு தேவை. மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனை என்று வந்தால் உடனே சோர்ந்து போகக் கூடாது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாள். பலமுறை முயற்சி செய்து ஒரு விஷயத்தில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். சோர்ந்து போய் எந்த ஒரு விஷயத்தையும் எந்த ஒரு வாய்ப்பையும் வேண்டாம் என்று தவற விடாதீங்க. உங்களால் முடியும், உங்களால் மட்டும் தான் முடியும் என்று நம்புங்கள். பலமுறை முயற்சி செய்தால் சாதிக்க முடியாதது வாழ்க்கையில் எதுவுமே இல்லை. ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது தான் பிரச்சினை இருக்கும். போகப்போக எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ஒன்றுக்கு பலமுறை யோசித்து இன்று ஒரு வேலையை செய்ய வேண்டும். ஒரு வார்த்தை வாயிலிருந்து வருவதாக இருந்தால் கூட, அதை அவ்வளவு சுலபமாக விடக்கூடாது. உடல் அசதி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பிரச்சினைகளை சமாளிக்கும் போது தான் நமக்கு புது அனுபவங்கள் கிடைக்கும். ஆகவே இன்று எதிர் கொள்ளும் பிரச்சனைகளை எல்லாம் வாழ்க்கைக்கு அனுபவ பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும். குறிப்பாக கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. குழந்தைகளின் போக்கை நிதானமாக கவனிங்கள். அவர்கள் எங்கு போகிறார்கள், எங்கு வருகிறார்கள் என்ன வேலை செய்கிறார்கள், மொபைலில் என்ன பார்க்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தவும். வேலை வேலை என்று இல்லாமல், குடும்பத்துக்கும் கொஞ்ச நேரம் ஒதுக்குவது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் இலக்குகளை நோக்கி பயணம் செய்து கொண்டே இருப்பீர்கள். விடாமுயற்சியை மேற்கொள்வீர்கள். எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் இருக்கும். ஆனால் எல்லா விஷயத்திற்கும் நேரமும் காலமும் கூடி வரவேண்டும் அல்லவா. ஆகவே கொஞ்சம் பொறுமையாக இருங்கள். விடாமுயற்சியை விட சொல்லவில்லை. ஆனால் அவசரப்பட்டு இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்காதீங்க. பொறுமையாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். எந்த பிரச்சினையையும் கண்டு பயந்து ஒதுங்க மாட்டீர்கள். மேலதிகாரிகளிடம் சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் பொறுமையாக பேசுங்கள். இருக்கும் வேலையை விடும் அளவுக்கு பிரச்சனை செஞ்சுராதீங்க. புதிய வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். எதிரிகளாகவே இருந்தாலும் அவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது நன்மையை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வாரா கடன் வசூலாகும். பணவரவு அதிகமாக இருப்பதால், கொஞ்சம் செலவுகளும் அதிகரிக்கும். ஆடம்பர செலவு சேமிப்பை குறைக்கும். அதனால் கூடுமானவரை செலவை குறைப்பது நன்மையை தரும். உங்களால் முடிந்தால் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். மற்றபடி பணத்தை அனாவசியமாக செலவு செய்யாதீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். பழைய விஷயங்களை எல்லாம் நினைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இன்றைய வேலையில் கவனம் செலுத்தினால்தான், இன்றைக்கு சாதிக்க முடியும். இன்றைக்கு ஜெயிக்க முடியும். நேற்று நடந்தது, நாளைக்கு நடக்கப் போவதை எண்ணி, எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே பழைசை எல்லாம் தூக்கி போடுங்கள். இன்று புதிதாக பிறந்த மனிதரைப் போல வேலையை தொடங்குங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மன குழப்பம் இருக்கும். எந்த பிரச்சனைக்கு எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்து கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அடம்பிடித்து எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். ஆன்லைன் பிசினஸில் கவனமாக இருங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக தான் இருக்கும். ஆனால் வேலையில் அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியமின்மை உங்களை நிம்மதியாக வேலை செய்ய விடாது. ஆகவே முதலில் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணை சொல்லுவதை கேட்டு நடக்கவும். முன்கோபத்தை குறைக்கவும். மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கி, முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால், கூடுதல் உழைப்பை போட்டுத்தான் ஆக வேண்டும்.