இன்றைய ராசிபலன்: 09.07.2020: ஆனி மாதம் 25ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

1023

இன்று சார்வரி வருடம், ஆனி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 17ம் தேதி, 9.7.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி காலை 11:37 வரை, அதன்பின் பஞ்சமி திதி, சதயம் நட்சத்திரம் அதிகாலை 4:53 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம் * சந்திராஷ்டமம் : ஆயில்யம் * பொது: தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்: உத்யோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் நிதானமாக கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். வியாபாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்புக் கூடும். பேச்சில் நிதானம் தேவை.


ரிஷபம் : அலுவலக நண்பர்களை அனுசரித்து சென்றால் பலவகைகளில் நன்மைகளை பெறலாம். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு போட்டிகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுக்கு அரசாங்க வகையில் உதவி கிடைக்கும்.

மிதுனம் : கடந்த சில நாட்களாக இருந்த மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெருகும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள்.

கடகம்: எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை யோசித்துப் பேசுங்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உதவுவர்.

சிம்மம் : கலைத் துறையினர் அனுபவ அறிவைப் பயன்படுத்தி வெற்றி காண்பர். பிரச்னையில் மாட்டிய நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். சாதுர்ய பேச்சினால் அலுவலகத்தில் உள்ள நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும்.

கன்னி: தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். உறவினர் மூலம் நல்ல தகவல் வரும். தம்பதியரிடையே இருந்த இடைவெளி குறையும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

துலாம்: திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பெண்கள் கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வர். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

விருச்சிகம் : கடின உழைப்பால் நற்பெயர் எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தைப் புது இடத்திற்கு மாற்றத் தீர்மானிப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் ஏற்படும். கலைஞர்களுக்கு புது வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்னைகளை குறைப்பீர்கள். அலுவலகத்தில் முக்கிய பணிகளை பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு போட்டிகள் அதிகரிக்கும்.

மகரம் : வியாபாரத்தில் கூடுதலாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி குறைந்தாலும் பெரிய பிரச்னை இருக்காது. குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள்.

கும்பம்: பெண்களுக்கு நற்செய்தி ஒன்று காத்திருக்கிறது. பணவரவு அதிகரிப்பதால் குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு தள்ளிப்போன ஒப்பந்தங்கள் நல்லபடியாக கையெழுத்தாகும்.

மீனம்: அலுவலகத்தில் இதுவரை இருந்த தடைகள் அகலும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த அவப்பெயர் நீங்கும். பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்களை பெறுவீர்கள்.