இன்றைய ராசிபலன் (11-07-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

943

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். நம்பிக்கையோடு எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும், அதில் நிச்சயம் வெற்றியுண்டு. நீண்ட நாட்கள் வரை அடைக்க முடியாத ஒரு கடனை அடைக்கும் சந்தர்ப்பம் இன்று ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இந்த நாள் திருப்தி தரும் நாளாகத்தான் இருக்க போகின்றது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயங்களிலும் பொறுமையோடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால், பொறுமை அவசியம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். வார்த்தையில் நிதானம் தேவை.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்கள் கழித்து, குடும்பத்தோடு வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளியே சென்றால், கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேவையற்ற மன கஷ்டம் விட்டு விலகும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனை, இன்று ஒரு முடிவுக்கு வரும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கு வாய்ப்பு உண்டு. மன உறுதியோடு எந்த ஒரு செயலையும் தொடங்குங்கள். நிச்சயம் வெற்றிதான்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமை கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுகின்றது. அலுவலகத்தில், உங்களுடைய மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டைப் பெற போகிறீர்கள். அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை உயர்த்தி தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று கடினமாக உழைத்து வெற்றி அடையப் போகிறீர்கள். கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியை நினைத்து சந்தோஷப்பட போகிறீர்கள். உங்களுக்கு மனசு புது காலமாகவே இருக்கும். ஆனால் தேவையற்ற வாக்குவாதம் என்று வந்தால் மட்டும் நீங்கள் அமைதியாக போவது நல்லது. வீண் விவாதம் வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். உங்களது மனதை இறைவழிபாட்டில் செலுத்த வேண்டும். அநாவசியப் பேச்சை குறைத்துக் கொண்டு முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப்போடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுபச் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் சொந்தபந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சொந்த தொழில் முன்னேற்றத்தோடு செல்லும். அலுவலகப் பணியில் எந்த பிரச்சனையும் இருக்காது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்க வேண்டாம். அவசர முடிவு எடுப்பதாக இருந்தால், முன்னோர்களை ஆலோசித்து எடுப்பது நல்லது. மற்றபடி அலுவலகப் பணிகள் சொந்தத் தொழில் எல்லாம் சுமூகமாக தான் செல்லும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலம் சற்று மந்தமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை என்று வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடல்நலத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்று சுபச்செய்தி வந்து சேரப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவு பலிக்கும் நாள் வந்துவிட்டது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு, மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். யாரை நம்பியும் எந்த ஒரு விஷயத்தையும், வெளிப்படையாக சொல்ல வேண்டாம். உங்களது மனதை இறைவழிபாட்டில் ஈடுபடுத்துங்கள்.