இன்றைய ராசிபலன் (13.05.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

662

இன்றைய ராசிபலன்..

மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல படியில் தீரும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். தம்பதிகளிடையே அன்னோன்யம் பெருகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புரிய தொழில் முதலீடுகளில் எதிர்பார்க்க லாபம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். தொழில், வியாபாரங்கள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்தோஷமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். அனைத்து காரியங்களையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைதூர பயணங்களால் லாபம் ஏற்படும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களால் தன வரவு உண்டாகும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய மனிதர்களால் ஆதாயங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த கடன் தொகை வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு விடயத்திலும் யோசிக்காமல் முடிவெடுக்க கூடாது. சிறு அளவிலான உடல்நலக் கோராறுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும். மனதில் சந்தோஷம் பெருகும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் மறைந்திருக்கும் உங்களின் திறமைகள் வெளிப்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் பெருகும். சிலர் குடும்பத்திற்கு ஆடம்பர செலவுகள் செய்வார்கள்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கும் செயல்களில் அவசரம் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் அசதி ஏற்படும். பொருள் வரவில் இழுப்பறி நிலை இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்காக மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசாங்க ரீதியான காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த நற்செய்திகள் வந்து சேரும். பெண்கள் வழியில் சிலருக்கு தன லாபம் ஏற்படும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். புதிய வீடு, வாகனம் வாங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலர் மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள்.

மீனம்

மீன ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் வெற்றி கிடைக்கும். உடல் மற்றும் மனம் திருப்தியான நிலையில் இருக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here