இன்றைய ராசிபலன் (20-07-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

923

மேஷம்

புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு உயரும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும்.

ரிஷபம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் உதயமாகும். உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் காலதாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.


மிதுனம்

வாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு உண்டாகும். வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

கடகம்

தாய்மாமன்வழி உறவுகளால் எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பணியில் மேன்மையான சூழல் அமையும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். எண்ணங்களின் போக்கில் மாற்றம் உண்டாகும். சம வயதினர்களிடம் கவனத்துடன் இருக்கவும்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். புண்ணிய வேள்விகளால் நற்பேறுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள்.

கன்னி

தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். பூமி விருத்தி உண்டாகும். பிரபலமானவர்களின் உதவிகள் கிடைக்கும். பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீர் நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழந்த மனக்கவலைகள் தீரும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.

துலாம்

சுயதொழிலில் எதிர்பாராத வியாபாரம் நடைபெறும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி காலதாமதமாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

விருச்சகம்

கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். பணி சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய பலன்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு உயரும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். வரவுக்கேற்ற செலவு உண்டாகும். உடல்நலனில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும்.

மகரம்

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சகோதரர்களினால் சுபவிரயம் உண்டாகும். புதிய லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும்.

கும்பம்

வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அந்நியர்களால் வருமானம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும்.

மீனம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயம் உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்த