இன்றைய ராசிபலன் (23.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

733

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய குறிக்கோள்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். தைரியம் இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும். எல்லா வேலையையும் இன்றே செய்து முடித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக செய்து முடிப்பீர்கள். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். அதிரடியாக எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டீங்க. நிதானமாக யோசித்து செயல்படுவதால் வாய்ப்புகள் கைநழுவி போனது போல தோன்றும். கவலை படாதீங்க. இன்று புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேவையே கிடையாது. அதனால் பிரச்சனைகள் தான் வரும். ஆகவே இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது தான் நல்லது. மேலதிகாரிகளிடம் முன்கோபம் பட வேண்டாம். வார்த்தைகளில் இனிமை தேவை. கசப்பான வார்த்தைகளை இன்று பயன்படுத்தாதீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வான நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் இருக்கும். எல்லா வேலைகளையும் நாளை தள்ளி போடலாம் என்று யோசிப்பீங்க. ஆனால் நாளைக்கான வேலை இரட்டிப்பாகுமே. அதை கொஞ்சம் சிந்திக்கணும் அல்லவா. கூடுமானவரை இன்றைக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்து விடுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. நிறைய தண்ணீர் குடிங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். அதற்காக பயப்படாதீங்க உங்களுடைய அன்றாட வேலையை எப்போதும் போல செய்யுங்கள். வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் அதிகமாக சிந்தித்தால் இன்று நல்லது. அடுத்தவர்களை குறைவாக எடை போடாதீங்க. நம்முடைய எதிராளியின் பலம் என்ன என்று தெரிந்தால் தான் நம்மால் ஜெயிக்க முடியும். இன்று உங்களுடைய உத்வேகத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தனும் அவ்வளவுதான்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபகாரிய பேச்சுக்களை தொடங்குவீர்கள். சுப செலவுகளும் இருக்கும். அதை சமாளிக்க சில பேர் கடன் வாங்குவீங்க. அது பிரச்சனை கிடையாது. கல்யாணம் காதுகுத்து என்றால் கடன் வாங்கி தான் சீர்வரிசை செய்யணும் என்ற சூழ்நிலை இன்று நிலவுகிறது. அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் ஆக இருக்கும். உதாரணத்திற்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது, நல்ல வேலையை தேர்ந்தெடுப்பது, போன்ற ரொம்ப ரொம்ப பெரிய முடிவுகளை எல்லாம் இன்று எடுக்கலாம். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. தெரியாத நபரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது. தெரியாத நபர் ஏதாவது சொன்னா அதை அப்படியே முழுசா நம்பிட கூடாது. சீட்டு போடுவது, வங்கியில் கணக்கு வழக்கு தொடர்வது, நகை அடமானம் வைப்பது, யாருக்காவது கடன் கொடுப்பது போன்ற வேலை எல்லாம் இன்றைக்கு செய்ய வேண்டாம். வேலையை கூடுதல் பொறுப்போடு செய்வது நன்மையை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் வந்தால் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்களோ, அதே போல பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் மனப்பக்குவத்தை கொண்டு வர வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சில எதிரிகளின் தொல்லையை தாங்கித்தான் ஆக வேண்டும். துவண்டு போகக் கூடாது. எதிரிகளுக்கு மூக்கில் ஒரு பஞ்ச் எடுங்கள். அடிக்க சொல்லலங்க. அதிகாரம் பண்ணுங்க, மூக்கை உடைக்கிற மாதிரி நாலு வார்த்தை பேசுங்க போதும். எல்லாம் சரியா போகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். ஒரு விஷயத்தில் சுலபமாக வெற்றியை காண முடியாது. பலமுறை முயற்சி செய்யும்போதுதான் நல்லது நடக்கும். இதனாலையே பல பேருக்கு சோர்வு ஏற்படும். எத்தனை முறை இதே வேலையை பார்ப்பது என்று கைவிட்டு விடுவீர்கள். ஆனால் நீங்கள் பத்து வாட்டி முயற்சி செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். கடைசியில் யாரோ ஒருவன் வந்த அந்த வேலையை முடித்துவிட்டு நல்ல பெயர் வாங்க வாய்ப்பு உள்ளது, பார்த்துக்கோங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தேகம் நிறைந்த நாளாக இருக்கும். யாரின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை வராது. எல்லாவற்றையும் நீங்களே நின்று செய்யனும் என்று நினைப்பீர்கள். குறிப்பாக தொழிலில் பாட்னரை நம்ப மாட்டீங்க. கடையில் கல்லாப்பெட்டியில் உட்காருபவர்களை நம்ப மாட்டீங்க. நல்லவர்களைக் கூட நோட்டம் விடுவீர்கள். இதனால் அடுத்தவர்களுடைய மனசு கஷ்டப்படும். உஷாரா இருப்பது நல்லது. அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தாமல் இருப்பது அதைவிட நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். எந்த வேலையிலும் மனது ஈடுபடாது. கொஞ்ச நேரம் தூங்கலாம் போல இருக்கும். ரொம்ப உடல்நிலை சரியில்லாதவர்கள் வேலைக்கு லீவு போட்டு ஓய்வு எடுப்பது நல்லது. அரைகுறை மனதோடு அரைகுறை ஆரோக்கியத்தோடு வெளியே செல்லாதீங்க. அது பிரச்சனையில் கொண்டு போய் முடித்து விடும். முதலீட்டில் கவனம் இருக்கணும். கடன் வாங்குவதை குறைக்கணும். செலவையும் குறைக்கணும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணம் நன்மையை கொடுக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டை பெற்றுத் தரக்கூடிய நாள் இது. நைசாக பேசி அனைவரையும் உங்கள் வசப்படுத்திவிடுவீர்கள். உங்கள் பேச்சில் வசீகர திறமை இன்று வெளிப்படும், நல்லது நடக்கக்கூடிய நாள். வருமானம் இரட்டிப்பாக கூடிய நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இன்று பெரிய அளவில் சாதிக்கலாம்.