இறந்ததாக கூறப்பட்ட சடலத்தின் அருகே சென்ற போது… வந்த முனகல் சத்தம்: நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்!!

762

கேரளாவில் இறந்து விட்டார் என கருதிய நபர் போட்டோகிராபரால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாசன், கலமச்சேரி என்ற இடத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இவரின் நண்பர் ஒருவர் சிவதாசனை பார்க்கவந்த போது, பேச்சுமூச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

உடனடியாக அந்த நண்பர் பொலிசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சிவதாசனை பரிசோதித்து பார்த்து இறந்துவிட்டதாக நினைத்துள்ளனர். இதற்கு அடுத்தகட்டமாக சிவதாசனை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர் டோமி தாமஸை அழைத்துள்ளனர்.


அவரிடம், சிவதாசன் என்பவர் இறந்து விட்டதாகவும், அவரை புகைப்படம் எடுத்து தரும்படியும் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவயிடத்துக்கு டோமி தாமஸ் சென்றதுடன், புகைப்படம் எடுக்க சிவதாசன் அருகே சென்றார். அப்போது சிறிய முனகல் சத்தம் கேட்டுள்ளது, அருகே சென்று பார்த்த போது தான் சிவதாசன் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக பொலிசாரை அழைத்து விடயத்தை கூற, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிவதாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.