இறந்தும் மக்களை வாழவைத்த நாயகன்!.. கேரளாவே கொண்டாடும் இளைஞன் அனுஜித்!!

678

கேரளாவை சேர்ந்த 27 வயதான இளைஞன் அனுஜித் உயிரோடு இருக்கும் போது நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர், தற்போது இறந்த பின்னரும் உடல் உறுப்பு தானம் மூலம் மக்களுக்கு வாழ்வு கொடுத்துள்ளார்.

அவரை பற்றி விரிவான செய்தி,

கொரோனா காலத்தால் வேலையிழந்த அனுஜித், வேறு வேலை தேடி சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் கடந்த வாரம் உயிரிழந்தார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் அனுஜித்தின் ஆசைப்படி அவரது ஆசைப்படி உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.

இதன்படி அவரது இரு விழிப்படலங்கள், இருதயம், இரு சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கைகள் ஆகியவை எட்டு பேருக்கு தானம் அளிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர்


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் ரயில் விபத்தை தடுத்து நிறுத்தியவர் அனுஜித் என்பது தெரியவந்துள்ளது.

2010ம் ஆண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, கொட்டக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்துள்ளது.

இதனை பார்த்த அனுஜித், தன் உயிரையும் துட்சமெண கருதி உடனடியாக தன்னுடைய சிவப்பு பையை ஏந்திக் கொண்டு தண்டவாளத்தில் ஓடினார், பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவத்தை நினைவு கூர்ந்த கேரள அமைச்சர், அன்று பல உயிர்களை காப்பாற்றியவர் இன்று எட்டு பேரில் வாழ்கிறார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here