இறப்பில் கூட பிரியக் கூடாது… பரிதாபமாக உயிரிழந்த வயதான தம்பதி! தெரியவந்த காரணம்..!

707

தமிழகத்தில் வயதான தம்பதியினர், இறப்பிலும் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லர்அருள்சாமி (75). மீன் வியாபாரியான இவருக்கு பாக்கியவதி(65) என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பத்தில் அந்த கிராமத்தில், மன்னன் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு சாமுவேல், மார்ட்டின் என இரண்டு மகன்களும் பத்மாவதி என்ற மகளும் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டு மகன்களும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். மகளுக்கு அருகிலுள்ள நெய்தவாசல் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், பாக்கியவதி கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். அவரது மகன்கள் சென்னையில் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பாக்கியவதியும் அவரது கணவர் முல்லர் அருள்சாமியும் விஷமருந்தி வீட்டிலேயே கட்டிப்பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனை அறிந்த அவரது மருமகன் சசி அவர்களை காப்பாற்ற சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here