இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கையின் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அவர், நான்கு ஆண்டும் பிரிஸ்பேர்னிலும் அதன் பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிட்னியிலும் வசித்துவந்துள்ளார்.
இவரது புகலிட கோரிக்கை குடிவரவுத் திணைக்களத்தினாலும் மீளாய்வு மையத்தினாலும் நிராகரிக்கப்பட்டிருந்தநிலையில், நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார்.
இவரது மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதமளவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, இவர் சில தினங்களுக்கு முன்னர் சிட்னி Blacktown பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.