ஈழத்து பெண் லொஸ்லியாவுக்கு திடீரென்று அடித்த அதிர்ஷ்டம்! இணையத்தை அலறவிட்ட இந்தியர்கள்!

932

இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமாகி, இன்றுடன் ஒரு வருடம் ஆவதை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று பிக்பாஸ் கவினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது #1yearoflosliyaism டிரெண்டாகி வருகிறது.

பிக்பாஸ் பிரபலமாக அறிமுகமான லாஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் குடிபுகுந்து இன்றுடன் ஒரு வருடம்.

பிக்பாஸ் பிரபலமாக வந்து தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.


ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரெண்ட்ஷிப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், லொஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது என இவரை போல பல நெட்டிசன்களும் டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.