உயிரை பறிக்கும் பால்! தினமும் பச்சையாக குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்வளவு நன்மைகளா?

881

நமது ஆரோக்கிய வாழ்விற்கு பாலை விட சிறந்த மற்றும் முக்கியமான பொருள் எதுவுமில்லை.

நமது முன்னோர்கள் பெரும்பாலும் பாலை கொதிக்க வைக்காமல் பச்சையாகத்தான் குடித்தார்கள். அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

பாலும் இப்பொழுது பதப்படுத்தல் முறைக்கு ஆளாகிறது. இதனால் நாம் பல சத்துக்களை இழக்கிறோம் என்பதே உண்மை.

பாலை பச்சையாக குடிப்பதால் சில பாதிப்புகளும் ஏற்படலாம். இந்த பதிவில் பாலை பச்சையாக குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா என்று பார்க்கலாம்.


பாலை பதப்படுத்தும் முறை 1900 களில் தான் தொடங்கப்பட்டது. இந்த முறையின் மூலம் அதிக நாட்கள் கெடாமலும், பல ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்யவும் உறுதி செய்யப்பட்டது.

பாலை பச்சையாக குடிப்பதால் நல்லது மற்றும் கெட்டது இரண்டுமே ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட பாலை குடிப்பது அலர்ஜிகள், இதய நோய் முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும்.

பச்சை பாலின் நன்மைகள்

 • புல்லை உண்ணும் விலங்குகளிடம் இருந்து பெறப்படும் சுத்தமான பச்சை பால் ஆரோக்கியமான அமினோ அமிலங்களையும், என்சைம்களையும் கொண்டுள்ளது.
 • இது பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
 • இவற்றில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் பாலை பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாக்கிறது.
 • பசு வளர்க்கப்படும் விதம், அது எடுத்துக்கொள்ளும் உணவுகள், அதனிடமிருந்து பால் எவ்வாறு பெறப்படுகிறது என்பதை பொறுத்து அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

 • கால்சியம் அதிகம் இருக்கும் பொருட்களில் பால் மிகவும் முக்கியமானதாகும்.
  பச்சை பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவு பதப்படுத்தப்பட்ட பாலில் இருப்பதை விட அதிகமாகும்.
 • நமது எலும்புகளும், பற்களும் பலமாக இருக்க கால்சியம் மிகவும் முக்கியமானதாகும். மேலும் பதப்படுத்தபட்ட பாலை விட பச்சை பாலை நமது உடல் எளிதில் ஏற்றுக்கொள்ளும்.
 • நீங்கள் எடை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு பச்சை பால் நல்ல தீர்வாக இருக்கும். உண்மைதான் பச்சை பால் உங்களின் எடை அதிகரிப்பதையும், உடல் பருமனையும் கட்டுப்பட்டிருக்குள் வைத்துக்கொள்ள உதவும்.
 • இதில் அதிகமாக இருக்கும் புரோட்டின் உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

பக்க விளைவுகள்

 • சிலருக்கு பச்சை பால் குடித்தவுடன் உடல்நல கோளாறுகள் ஏற்படலாம்.
  அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதனை குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.
 • குறுகிய காலகட்டத்தில் அதிக பாலை குடிக்கக்கூடாது. அளவோடுதான் குடிக்க வேண்டும்.

 • கர்ப்பிணி பெண்கள் பச்சை பாலை குடிப்பதற்கு முன் மருத்வவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.