உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக புலஸ்தினியின் சிறிய தந்தையார் கைது!!!

720

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த செல்வராசா தேவகுமார் என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.


அத்துடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்,

சாய்ந்தமருது தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மட்டக்களப்பு – தேற்றாத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் புலஸ்தினியின் சிறிய தந்தை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.