உலக அழிவு உறுதி..? மாயன் காலண்டர் படி அடுத்த ஜூன் 21 2020’ல் தான் உலகம் அழியப் போகுதாம்..! விஞ்ஞானி கணிப்பு..!

1136

கொரோனா வைரஸ் தொற்றுநோய், தொடர்ச்சியான சூறாவளிகள் மற்றும் பூகம்பங்கள் உலக அழிவுக்கு போதுமானதாக இல்லை என்றால், அடுத்த வாரம் உலகின் முடிவை முன்னறிவிக்கும் ஒரு கோட்பாடு இங்கே உலவி வருகிறது.

மாயன் காலெண்டர் நினைவில் இருக்கிறதா? 21 டிசம்பர் 2012 அன்று உலக முடிவை முன்னறிவித்த கோட்பாடு அது.

அந்த காலண்டரை காலண்டர் முதல் முறையாக தவறாகப் படித்ததாகவும், உண்மையான உலக அழிவு உண்மையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21, 2020 அன்று தான் என்று பீதியை கிளப்பி வருகின்றனர்.


“ஜூலியன் நாட்காட்டியில், நாம் தொழில்நுட்ப ரீதியாக இப்போது 2012’இல் இருக்கிறோம். பின்னர் கிரிகோரியன் நாட்காட்டியாக மாற்றப்பட்டதன் காரணமாக ஒரு வருடத்தில் இழந்த நாட்களின் எண்ணிக்கை 11 நாட்கள். 268 ஆண்டுகளாக கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தி (1752-2020) நாம் இழந்த மொத்த 11 நாட்கள் = 2,948 நாட்கள். 2,948 நாட்கள் / 365 நாட்கள் (வருடத்திற்கு) = 8 ஆண்டுகள்” என்று விஞ்ஞானி பாவ்லோ டலாகோகுயின் கடந்த வாரம் ட்வீட் செய்துள்ளார்.

2012 டிசம்பரில் உலக முடிவு குறித்து செய்யப்பட்ட முதல் கணிப்பால் அந்த சமயங்களில் பெரும் பீதியுணர்வு மக்களிடையே ஏற்பட்டது. மெக்ஸிகோ மற்றும் குவாத்தமாலாவில் உள்ள மாயன் தளங்களுக்கு ஏராளமான மக்கள் வந்தனர். இது குறித்து 2012 எனும் பெயரில் ஒரு ஹாலிவுட் படம் கூட எடுக்கப்பட்டது. ஆனால் பெருத்த ஏமாற்றமாக அப்போது எதுவும் நடக்கவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கோட்பாடுகள் மீண்டும் வந்துள்ளன.

எனினும் ஜூன் 21 அன்று உலகம் முடிவடையுமா இல்லையா என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்லும். அதுவரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.