“எனக்கும் மன அழுத்தம் உள்ளது – நானும் இறந்துவிடுவேனா?” :பிரபல நடிகை பதிவிட்ட உருக்கமான பதிவு..

893

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பொலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

இந்நிலையில் தனக்கும் மன அழுத்தம் இருப்பதாக மற்றுமொரு பிரபல நடிகையான பாயல்கோஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் 2015 முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் மருந்துகளை உட்கொண்டு வருகிறேன்.

எனக்கும் மரண பயம் உண்டு என்பதை அவ்வப்போது உணர்கிறேன். சில சமயம் இறந்துவிட்டதாக கூட உணர்வேன்.


அந்த சமயங்களில் உடனே நான் கோகிலாபென் மருத்துவமனைக்கு விரைந்து செல்வேன்.

ஆனால் இதுபோன்ற தருணங்களில் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது குடும்பமும், நண்பர்களும் அருகில் இருந்து என்னை காப்பாற்றினார்கள்’ என்று கூறியுள்ளார்.