என் புருஷன மீட்டுக் குடுங்க… கலெக்டர் அலுவலக வாசலில் கைக்குழந்தைகளுடன் கதறி அழுத இளம்பெண்!!

51

குடும்பத்தின் வறுமை மற்றும் கடனை தீர்க்க வெளிநாட்டில் வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன்.

இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இவருடைய மனைவி 28 வயது மதுபாலா. இருவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

துபாய்க்கு வேலைக்கு சென்ற பார்த்திபன் மனைவியிடம் அடிக்கடி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள் தன்னை பிரம்பால் அடிப்பது போன்ற வீடியோவை தனது மனைவி மதுபாலாவிற்கு அனுப்பியிருந்தார்.

இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மதுபாலா, கணவரை மீட்டுத்தரக் கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க தனது குழந்தைகளுடன் வந்திருந்தார்.


ஆனால், கலெக்டர் வாக்கு எண்ணும் மையத்திற்குச் சென்று விட்டதால், மதுபாலா தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வாசலிலேயே காத்துக் கிடந்தார்.

கணவனை மீட்டுத் தரக் கோரி இளம்பெண் ஒருவர் கைக் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வாசலில் காத்துக் கிடந்தது காண்பவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.