“ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலில் நான் சிறிதும் ஈர்க்கப்படவில்லை” கமல்ஹாசன் கூறிய பரபரப்பு தகவல் !

439

90 களில் மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன்’, இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடித்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது அதுவே முதல் முறை . ‘இந்தியன்’ படத்தில் ரஹ்மானின் பாடல் ஒன்று குறித்து தனக்கு பெரிதாக பிடிக்கவில்லை என கமல் ஹாசன் சமீபத்தில் ரஹ்மான் முன்னிலையிலே வெளிப்படுத்தினார்.

இசையமைப்பாளர் இளையராஜாவைத் தவிர வேறு இசையில் தனக்கு கண்மூடித்தனமான அன்பு வைக்க முடியாது என்பதையும் கமல் ஏற்றுக்கொண்டார்.

இந்தியன் படத்தில் வரும் கப்பலேறி போயாச்சு பாடலில் தனக்கு விருப்பமில்லை மற்றும் தன்னை அது வெகுவாக ஈர்க்கவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.


அதை தான் இயக்குனரிடம் கூட சொன்னதகாவும், ஆனால் அதை படமாக்கும்போது அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்ததாக மாறியதாகவும் கூறியுள்ளார்.