ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினரானது இந்தியா!

825

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நாவின் பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆண்டுக் காலத்துக்கு ஐ.நா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் ஜூன் 17ஆம் தேதியன்று நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றன.

2021-22 ஆண்டுகளுக்கு ஆசியா – பசிபிக் பிரிவில் இருந்து நிரந்தரமற்ற இடத்துக்கு இந்தியா வேட்பாளராக இருந்தது. இந்தக் குழுவில் இருந்து தற்காலிக உறுப்பினர் இருக்கைக்குப் போட்டியிடும் ஒரே வேட்பாளர் இந்தியாதான். அதன் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 உறுப்பினர்களைக் கொண்ட ஆசியா – பசிபிக் குழுவால் புதுடெல்லியின் வேட்புமனுவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் மிக சமீபத்தில் 2011-2012ஆம் ஆண்டுகளில் இந்தியா பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. 2021 ஜனவரி 1 முதல் இரண்டு ஆண்டுக் காலத்துக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும்.


இதுகுறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.மூர்த்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “இந்தியாவுக்குப் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகியிருக்கிறது, மேலும் கொரோனா நெருக்கடிக்குப் பிந்தைய உலக சீர்திருத்த பன்முக அமைப்புக்கான தலைமைத்துவத்தையும் புதிய நோக்குநிலையையும் இந்தியா தொடர்ந்து வழங்கும். எட்டாவது முறையாக தற்காலிக உறுப்பினராக ஆகியுள்ளது இந்தியா. ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர இருக்கைக்கான பதவி உயர்வை நோக்கி இந்தியா தனது பயணத்தை 2021ஆம் ஜனவரி 1ஆம் தேதி தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆசியா – பசிபிக் குழுமத்தின் ஒப்புதல் வேட்பாளராக இந்தியா இருந்தது, எந்த போட்டியையும் எதிர்கொள்ளவில்லை. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐந்து திறந்தவெளி இடங்களில் ஒன்றுக்கான அதன் தேர்தல் வழங்கப்பட்டது, இருப்பினும் தேர்தலுடன் நெருக்கமாக ஈடுபட்டுள்ள சில ஐ.நா தூதர்கள் தாங்கள் “எங்கள் விரல்களைக் கடக்கிறோம்” என்று கூறியிருந்தனர்.

கொரோனா காரணமாக ஐ.நாவில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு சமூக இடைவெளியோடு 20 பேர் அடங்கிய குழுக்களாகப் பிரித்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2010ஆம் ஆண்டு இந்தியா 187 நாடுகளின் ஆதரவைப் பெற்றது.