ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஒன்றாக பலியான சோகம்!!

30

கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கமாலி கோர்ட் அருகே உள்ள பகுதியில் ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பினீஷ், அவரது மனைவி அனு மற்றும் அவர்களது குழந்தைகள் ஜாஸ்மின், ஜோஸ்னா ஆகியோர் தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை வீட்டின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அந்த பகுதியில் வசித்து வரும் சிலர், காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, வீட்டின் ​​மேல் தளத்தில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். வீட்டில் உள்ள குடும்பத்தினர்கள் அனைவரும் தூங்கும் ஒரு அறையில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஷார்ட் சர்க்யூட் ஏற்படுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று

பரிசோதனை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் உயிரிழந்த பினீஷ் அங்கமாலி பகுதியில் வியாபாரி செய்து வருகிறார். தம்பதியரின் மூத்த மகன் மூன்றாம் வகுப்பிலும், இளைய மகன் முதல் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.