தமிழகத்தில் ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நடிகை மதுமிதா கொதித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்கோயில் அருகே ஏம்பல் கிராமத்தில் காணாமல் போன சிறுமி ஜெயபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. உடல் முழுவதும் கடித்து வைக்கப்பட்டதால் காயங்கள் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து ஜெயபிரியாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டுவிட்டரில் #JusticeforJayapriya என்ற ஹேஷ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நகைச்சுவை நடிகை மதுமிதா டுவிட்டரில், தூக்கு தண்டனைக்கு எதிர்க் கருத்துடையவள் நான். ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் பதிலாகாது. ஆனால், குழந்தையைச் சிதைத்த கொடூரனை ஓராயிரம் முறை தூக்கலிடவேண்டும் என மனம் கருவுகிறது.
பிஞ்சுப் பிள்ளையாடா கிடைத்தது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.