கடைசியாக தாயாருடன் சந்திப்பு… உடல் மொத்தமாக கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்: கதறும் குடும்பம்!!

566

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், தொழில்முறை போக்கர் விளையாட்டில் கைதேர்ந்த பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாகாணத்தையே உலுக்கியுள்ளது.

மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் மிக மோசமாக எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் 33 வயதான சூசி ஜாவோ. தொழில்முறை போக்கர் விளையாட்டில் நட்சத்திரமாக விளங்கிய இவர், பல மாகாணங்களில் அறியப்படுபவரும் கூட.

இதுவரை போக்கர் விளையாட்டில் 200,000 டொலர்களுக்கும் அதிகமாகவே சூசி வென்றுள்ளார் என கூறப்படுகிறது.


ஜூலை 12 ஆம் திகதி மாலை நேரம் சூசி கடைசியாக தனது தாயாருடன் காணப்பட்டார் என தெரிவித்துள்ள பொலிசார்,

மறுநாள் டெட்ராய்டின் புறநகரில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மிக மோசமாக எரிந்த அவரது உடல் காணப்பட்டதாக கூறுகின்றனர். இந்த கொலைச் சம்பவம் மற்றும் அவர் காணாமல் போனதன் பின்னணியில் உள்ள நோக்கம் ஒரு மர்மமாகவே உள்ளது என கூறும் பொலிசார்,

போக்கர் விளையாட்டில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்ற நிலையில், தொழில்முறை போட்டியாகவும் இருக்கலாம் அவர் கொலைக்கு பின்னால் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், சமீபத்தில் அவர் சந்தித்த உள்ளூரில் உள்ள யாரோ ஒருவருடன் இந்த கொலைக்கு தொடர்பிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் இடையே தொழில்முறை போக்கர் விளையாட்டுக்காக பம்பரமாக சுழன்ற சூசி சமீபத்தில் தனது பெற்றோருடன் வசிப்பதற்காக மிச்சிகனுக்கு திரும்பினார். எந்த சச்சரவிலும் தலையிடாத சூசியின் இந்த மர்ம மரணம், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012 ஆம் ஆண்டு உலக அளவில் தெரிவு செய்யப்பட்ட தொழில்முறை போக்கர் நட்சத்திரங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட போட்டிகளில் 90-வது இடத்திற்கு வந்தாலும் சூசி 73,000 டொலர்களை வென்றிருந்தார் என கூறப்படுகிறது.