கணவனின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்த மனைவி? விசாரணையில் தெரியவந்த உண்மை காரணம்!!

367

தமிழகத்தில் கணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, அவரின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கு சுந்தர் என்ற சுதீர் (34) என்ற மகன் உள்ளார். சுந்தருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அருள்செல்வி என்பவருன் திருமணம் நடைபெற்றுள்ளது, இந்த தம்பதிக்கு ஜெயஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

சுந்தர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அருள்செல்வி திருமங்கலம் அருகேயுள்ள கீழ்செம்பட்டி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கட்டிலில் இருந்து கீழே மயங்கி விழுந்ததாக கூறி சுந்தரை குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தரை பரிசோதனை செய்த மருத்துவர் அவரது உயிர் தளத்தில் ரத்தம் இருப்பதாகக் கூறி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


அதன் பின் பொலிசார் அங்கு விரைந்து வந்து மனைவி அருள் செல்வியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, கணவர் அடிக்கடி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால், அவரே அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் பிரேதபரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியும் என்பதால், அதில் வரும் தகவலை பொறுத்து பொலிசார் அடுத்த கட்ட விசாரணையை துவங்கவுள்ளனர்.