கணவனின் கோர முகம்! இறந்த மகளின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த பெற்றோர்! வெளியான வீடியோ!!

808

இந்தியாவில் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த பெண்ணின் கணவர் அவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தெலங்கானாவின் Rangareddy மாவட்டத்தின் Shamshabad நகரில் வசித்து வந்த தம்பதி லாவன்யா(32)- வெங்கடேஷ்..

இந்த தம்பதி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


இந்நிலையில், கடந்த வியாழன் இரவு பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட லாவண்யா, தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறினார்.

இதைக் கண்ட அவரின் உறவினர்கள் உடனடியாக பெற்றோர் மற்றும் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் விரைந்து சென்று பார்ப்பதற்குள், வீட்டில் தனியாக இருந்த லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார், லாவன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் அங்கு தற்கொலை தொடர்பான கடிதம் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றினர். அதில்,குழந்தை இல்லாததால் கணவரும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சல் கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் எனவும் இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக லாவண்யா குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து கணேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக புகார் அளித்துள்ள லாவண்யாவின் பெற்றோர் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், மகளின் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் இருந்த சிசிடிவி கமெராவில் இருந்த பதிவுகளை லாவண்யாவில் பெற்றோர் பார்த்துள்ளனர். அதில்,லாவண்யாவை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் இருந்துள்ளது.

இந்த வீடியோவை இணையவாசி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு முந்தைய பதிவில் லாவண்யா என்னுடைய கல்லூரியின் சீனியர், மிகவும் கன்னியமானவர், அவள் ஒரு சாதாரணமான பெண்மணி, அவள் வேண்டும் என்றே தன் வாழ்க்கையை முடிக்கவில்லை.

Click Here to Watch this video 

கணவர் அவளை தினமும் அடித்துக்கொண்டிருந்தார். அவர் அவளை ஏமாற்றிக் கொண்டிருந்தார், இதை அறிந்தும் லாவண்யா அவரை மூன்று, நான்கு முறை மன்னித்தாள்.

இருப்பினும் அவளால் வலியை தாங்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.