கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து.. மனைவி காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்!

415

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிப்பவர்கள் மனராம்-பப்பு தேவி தம்பதி(30) பப்பு தேவி, கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துள்ளார். இது கணவனுக்கு தெரியவந்துள்ளது.

இதை சுதாரித்துகொண்ட மனைவி, கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி, மனராம் தூங்குவதற்கு முன்பு, அவருக்கே தெரியாமால் தூக்கு மாத்திரை கொடுத்துள்ளார் பப்பு தேவி.

அதைத் தொடர்ந்து, தன்னுடைய காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்ற கணவனைப் பிடித்து இழுத்து, அவரது விரல்களில் கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக இருவரும் கொலை செய்துள்ளனர். இதில், மனராம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.


மேலும், இந்த சம்பவத்தின் போது, மனராமின் காலில் அடிபட்டு ரத்தம் கசிந்துள்ளது. ஆனால், இவை அனைத்தையும் மறைத்து நல்லவர் போல் உறவினர்களிடம் பப்பு தேவி இத்தனை நாட்கள் நாடகமாடியுள்ளார்.

இதன்பின்னர், காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் தான், கொலையைச் செய்ததாக பப்பு தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அறிந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.