கணவன் கொடுத்த குளிர்பானத்தை நம்பி குடித்த புதுமணப்பெண்! அடுத்த சில மணிநேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!

833

இந்தியாவில் புதுப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரின் நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தலைமறைவான கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமா அரோரா. இவருக்கும் அருண்குமாருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது நகைகள் மற்றும் பணம் அருண்குமாருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தனியாக வாடகை வீடு எடுத்து ரமாவும், அருண்குமாரும் தங்கியிருந்தனர்.

அப்போது தனது தந்தை வைத்திய செலவுக்கு ரூ 1.5 லட்சம் பணம் வேண்டும் என அருண்குமார் கேட்ட நிலையில் தனது சகோதரர் மூலம் அதை ஏற்பாடு செய்து கொடுத்தார்.


ஆனால் பின்னரும், தனக்கு ரூ 5 லட்சம் பணம் மற்றும் பைக் வேண்டும் என மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார் அருண்குமார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு இரவு நேரத்தில் குளர்பானம் கொடுத்துள்ளார் அருண்குமார்.

அதை குடித்த பிறகு மயக்க நிலைக்கு ரமா சென்றுள்ளார், காலை மயக்கம் தெளிந்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை அருண்குமார் திருடி கொண்டு தலைமறைவானது தெரியவந்தது.

இது தொடர்பாக ரமா எழுத்துப்பூர்வமாக பொலிசில் புகார் கொடுத்துள்ள நிலையில் அருண்குமாரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.