கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்த இளம்பெண்! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… உடனிருந்த அத்தை கண்ட அதிர்ச்சி காட்சி!!

699

இந்தியாவில் கணவரை இரண்டு மாதத்துக்கு முன்னர் விவாகரத்து செய்துவிட்டு தந்தை வீட்டில் வசித்து வந்த இளம்பெண் நள்ளிரவில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பாரதி (23). இவருக்கும் சுராஜ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதன்பின்னர் தனியாக வசித்து வந்த பாரதி இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது தந்தை மற்றும் அத்தை வசிக்கும் வீட்டுக்கு வந்தார்.

அங்கு தனது அத்தையுடன் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கூரான ஆயுதத்தால் பாரதியை குத்தி கொன்றனர்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அத்தை கண்விழித்து பார்த்த போது பாரதி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சத்தம் போட முயன்ற நிலையில் கத்தினால் கொலை செய்துவிடுவோம் என அவரை மிரட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்கள். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பாரதியின் சடலத்தை கைப்பற்றினார்கள். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் பொலிசார் கூறுகையில், இந்த கொலை தொடர்பில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது, விரைவில் கொலையாளிகளை கைது செய்துவிடுவோம். அதற்கு பின்னரே இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here