கணவர் இறந்த சோகம்… மகளை கொன்று விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

200

பவானியில் தனியார் விடுதியில் 3 வயது மகளை கொன்றுவிட்டு பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சோந்தவ் சசிதரன்.

இவரது மனைவி கோகிலவாணி (25). இவர்களது மகள் இதாஜிகா (3). சசிதரன் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கோகிலவாணி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், குழந்தையை பராமரிக்காமல், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த கோகிலவாணியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கோகிலவாணி சனிக்கிழமை இரவு இதாஜிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறி பவானி கூடுதுறை அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இரண்டு நாட்களாகியும் அறை திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். அப்போது, அங்கு துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கோகிலவாணி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும்,


இதாஜிகா படுக்கையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த கோகிலவாணி, மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.