கண்முன்னே உயிரிழந்த 2 வயது மகள்: சோகத்திலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!

1025

இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உயிரிழந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது மகள் சினேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).

சம்பவ தினத்தன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பால்கனி வழியாக தவறி விழுந்துள்ளது.

இதில் பலத்த காயம் ஏற்பட உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சினேகா உயிரிழந்தார்.

மகளின் மரணத்தை கண்கூடாக பார்த்த பெற்றோர்கள் சந்திரா- சுலேகா அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தநிலையில் தங்களது குழந்தையின் கண்களை தானமாக வழங்க முடிவெடுத்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், என் மகள் இறந்துவிட்டாலும் இந்த உலகத்தை பார்ப்பாள், இதன்மூலம் இரண்டு குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை காண முடியும்.

எங்களுடைய கண்களை தானம் செய்ய முடிவெடுத்திருந்தோம், ஆனால் இரண்டு வயதுக்குள் எனது மகளின் கண்களை தானமாக கொடுப்போம் என நினைக்கவில்லை என்கின்றனர் கண்ணீருடன்.