கனடாவில் காணாமற்போன இலங்கைத் தமிழ்ப்பெண்!!

868

கனடாவில் காணாமற்போயுள்ள இலங்கை தமிழ்ப் பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமாரி கடைசியாக கடந்த 25ம் திகதி இரவு 10.30 மணிக்கு Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.


காணாமற்போன அன்று சசிகுமாரி அவர்கள் நீல நிற சட்டையும் மற்றும், பிங்க் பிஜாமா பாண்ட் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட சசிகுமாரி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.