கனடாவில் முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் சுற்றிய நபருக்கு நேர்ந்த கதி! கமெராவில் சிக்கிய காட்சி!!

910

கனடாவில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய விதியை பின்பற்றால் பொது வெளியில் வந்த நபரை பொலிசார் கைது செய்த வீடியோ காட்சி வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் இந்த விதி கட்டாயமாக்கப்படவுள்ளது. அந்த வகையில், கனடாவின் Quebec மாகாணத்தில், கடந்த சனிக்கிழமை முதல் முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இதனால் முகக்கவசம் அணியாதவர்களை அணியும் படி, பொலிசார் கூறியுள்ளனர். அவர்களுக்கு அந்த அதிகாரம் கொடுக்கபப்ட்டுள்ளது.

அப்படி, மாகாணத்தின் Montreal-வில் இருக்கும் உணவகம் ஒன்றில், நபர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் இருந்துள்ளார். இதனால் பொலிசார் அவரை முகக்கவசம் அணியும் படி கூறுகின்றனர். ஆனால் அந்த நபர் முகக்கவசம் அணியவோ, குறித்த உணவகத்தை விட்டு வெளியேறவோ மறுத்ததால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். அதன் பின் அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


நாட்டில் புதிய விதிமுறைகளை மீறினால் 400 டொலர் முதல் 6,000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் புதிய விதிமுறைகளை பின்பற்றுவது நல்லது. அதுவும் தேவையின்றி முகக்கவசம் அணியாமல் சென்றால், இந்த நபருக்கு நேர்ந்த கதி தான் மற்றவர்களுக்கும் என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் நாட்டில் உடல்நிலை சரியில்லாதவர்கள் உரிய காரணம் இருந்தால், முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை, ஆனால் இந்த நபர் அப்படிப்பட்டவரா என்பதும் தெரியவில்லை. Montreal கனடாவில் வைரஸின் மையமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.