காதலனை ஸ்குரூ டிரைவரால் சராமாரியாக குத்திய காதலனின் சகோதரர்!!

48

கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் 22 வயது இப்ராஹிம் ஹவுஸ் . இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரியவந்தது.

இதனால் இளைஞரை அழைத்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இப்ராஹிம் தொடர்ந்து அவரின் சகோதரியை காதலித்து வந்தார். இப்ராஹிம் தன்னுடைய காதலியுடன் பைக்கில் சென்றுள்ளார்.

இதை பார்த்த முசாமில் அவரை பின் தொடர்ந்து ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி வழிமறித்து தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து இப்ராஹிம் மீது சரமாரியாக குத்தத் தொடங்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இப்ராஹிமை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்‌. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவுக்காக உள்ள முசாமிலை தேடி வருகின்றனர்.