காதலிக்கும்போது ஒருவருக்கொருவர் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்?

1056

கீழே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஒரு தடவை நடந்தால் சம்பந்தப்பட்டவர் கோபத்தில் பேசுகிறார் என்று அர்த்தம் அதுவே பல முறை பல தடவை பல நாட்கள் தொடர்ந்தால் நீங்கள் காதலிக்கும் ஒரு ஆண் & பெண் ஏமாற்றுகிறார் முக்கியமாக உங்களை வெறுக்கிறார் என்பதற்கான மிக சிறந்த அறிகுறிகள் ஆகும்.

காதலிக்கும் போது வரும் வார்த்தை
“எப்பயும் உன் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு ” “எனக்கு நீ மட்டும் போதும் வேற எதுவும் வேணாம் ”

காதல் கசந்த பிறகு வரும் வார்த்தை
“ஏன் திரும்ப திரும்ப கால் பண்ணி தொந்தரவு பண்ணிட்டு இருக்க நான் இப்போ பிஸியா இருக்கேன் வேலை முடிஞ்சவுடனே நானே கால் பண்ணுறேன் வை போனை””ஸ்டேட்டஸ் பார்க்காம உன் கூட பழகியதுக்கு எனக்கு இது தேவை தான்”

காதலிக்கும் போது வரும் வார்த்தை
“நீ என்னை திட்டுனாலும் சண்டை போட்டாலும் என்னால உன் கூட பேசாம இருக்க முடியாது செல்லம்”


காதல் கசந்த பிறகு வரும் வார்த்தை
“ரொம்ப ஓவரா பேசுன அப்புறம் மரியாதை கெட்டுரும் பாத்துக்க”

காதலிக்கும் போது வரும் வார்த்தை
“சேர்ந்து தான் வாழ்வோம் சேர்ந்தேதான் சாவோம் ” “ஆமாம் ”

காதல் கசந்த பிறகு வரும் வார்த்தை
“உன்ன எப்போ பார்த்தேனோ அப்போயிருந்து என் நேரம் சரியில்லை ”

காதலிக்கும் போது வரும் வார்த்தை
“உன் முகத்தை கண் மூடாம பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு “”எனக்கும் தான் ”

காதல் கசந்த பிறகு வரும் வார்த்தை
“எப்படியாவது என்னை கழட்டி விட்டுட்டு வேற ஒருத்தரை கரெக்ட் பண்ணலாம்னு பாக்கிறியா”

காதலிக்கும் போது வரும் வார்த்தை
“நீ என்னை விட்டு பிரிஞ்சா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” “நானும் தான் ”

காதல் கசந்த பிறகு வரும் வார்த்தை
“எப்பப்பாரு இதையே சொல்லி டார்ச்சர் பண்ணிக்கிட்டு “