காதலியையும் மகளையும் கொன்று வீட்டுக்குள் புதைத்து… அப்பாவியாய் பல மாதம்: அம்பலமான பகீர் பின்னணி!!

773

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தமது இந்து காதலி கருத்து வேறுபாட்டால் விலகிச் செல்வது பொறுக்க முடியாமல், அவரையும் அவரது மகளையும் கொன்று குடியிருப்புக்குள் புதைத்த பகீர் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருந்து வந்தவர் இஸ்லாமியரான ஷம்ஷாத். திருமணம் முடித்து மணமுறிவும் பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பிரியா என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் ஏற்கனவே திருமணமாகி தற்போது மணமுறிவு பெற்று ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

பிரியாவிடம் தாம் ஒரு இந்து எனவும், தமது பெயர் அமித் எனவும் கூறி ஏமாற்றி காதலித்து வந்துள்ளார் ஷம்ஷாத்.


இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களின் உறவு நீடித்து வந்துள்ளது. ஷம்ஷாத் என்ற அமித்துடன் ஒரே குடியிருப்பில் பிரியாவும் மகளும் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் ஒருகட்டத்தில் தமது காதலர் ஒரு இஸ்லாமியர் என தெரியவந்ததும் ஆத்திரம் கொண்ட பிரியா, ஷம்ஷாத்திடம் சண்டையிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அவரிடம் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். இது பொறுக்க முடியாத ஷம்ஷாத் கடந்த மார்ச் 28 ஆம் திகதி பிரியா மற்றும் அவரது மகள் காஷிஷ் ஆகிய இருவரையும் கொன்று குடியிருப்பிலேயே புதைத்துள்ளார்.

இந்த நிலையில் பிரியாவின் தோழி சஞ்சல் என்பவர் கடந்த 3 மாதங்களாக தமது தோழியை தொடர்பு கொள்ள முடியாமல் கவலைப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தம்மால் இயன்ற விசாரணைக்கு பின்னர் தமது தோழி பிரியா மற்றும் அவரது குழந்தை காஷிஷ் ஆகிய இருவரையும் காணவில்லை என பொலிசாரிடம் புகர் அளித்துள்ளார்.

புகாரை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஷம்ஷாதை அழைத்து விசாரித்த பொலிசார், துப்பு துலங்காத நிலையில் அவரை விடுவித்துள்ளனர்.

ஆனால் ஷம்ஷாத் குடியிருந்த வீட்டில் இருந்து இரண்டு எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மாயமாகியுள்ள ஷம்ஷாதை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஷம்ஷாதின் முதல் மனைவிக்கும் பங்கு இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். தற்போது அவரும் தலைமறைவாகியுள்ளார்.

ஷம்ஷாத் பீகாரைச் சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த 10 ஆண்டுகளாக மீரட்டில் வசித்து வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். மேலும், ஷம்ஷாத் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.