காதலி இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணிடம் சில்மிஷம்.. இறுதியில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

1310

சென்னையில்..

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது அனைவரும் அறிந்தது தான். தொலை தூரங்களுக்கு செல்லும் இந்த பேருந்துகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் களைப்பு இன்றி பயணிப்பதற்காக தற்போது ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் புதுவையில் இருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்தில் பயணித்த ஜெர்மனி பெண்ணிடம் இளைஞர் ஒருவன் சில்மிஷத்தில் ஈடுபட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:- புதுவையில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் திண்டிவனத்தில் வசித்து வரும் ஜெர்மன் நாட்டு பெண் ஒருவர் பயணம் செய்தார். பெங்களூரு சென்று இருந்த அந்த பெண் பயணி படுக்கை வசதி கொண்ட டிக்கெட் புக் பதிவு செய்து இருந்தார். பேருந்து சென்று கொண்டிருந்த போது அந்த பெண் பயணிக்கு பக்கத்தில் இருந்த படுக்கை காலியாக இருந்தது.

அப்போது இளைஞர் ஒருவன் அந்த படுக்கையில் போய் படுத்து இருக்கிறான். அந்த சீட்டிற்கு உரிய நபர்தான் வந்து விட்டார் என்று நினைத்து அந்த பெண்ணும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அந்த இளைஞனோ தனது சில்மிஷத்தை தொடங்கியிருக்கிறான். திடீரென அந்த பெண்ணை கட்டிப்புடித்து பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்து இருக்கிறான். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தியுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் பஸ்சின் உதவியாளர் உள்ளே வந்து பார்த்து இருக்கிறார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இதையடுத்து, பஸ்சின் ஒட்டுநரும் உதவியாளரும் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இத்தனைக்கும் அந்த இளைஞரின் காதலியும் அதே பேருந்தில் அவருடன் வந்துள்ளார்.

இளைஞரின் காதலி பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை கண்டிக்காமல் தனது காதலனுக்கு ஆதரவாக பேசவே அவருக்கும் லேசான அடி விழுந்தது. தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பிடித்து தர்ம அடி கொடுத்த பஸ் ஊழியர்கள் நடு வழியில் இறக்கி விட்டனர். பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற இளைஞரை பஸ் ஊழியர்கள் சரமாரியாக அடிக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

கிருஷ்ணர் குளிக்கும் பெண்களை எட்டிப்பார்த்தார்.. இன்று ஜெயிலில் போடுவாங்க-திமுக எம்பி செந்தில்குமார் கிருஷ்ணர் குளிக்கும் பெண்களை எட்டிப்பார்த்தார்.. இன்று ஜெயிலில் போடுவாங்க-திமுக எம்பி செந்தில்குமார்

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் அடிப்படயில் வழக்கு பதிவு செய்த உருளையன் கோட்டை போலீசார், பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சரத் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர் சரத்தை சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here