காதலுக்கு எதிர்ப்பு… புதுமண ஜோடியாக காதலர்கள் காவல்நிலையத்தில் தஞ்சம்!!

217

வேலூரில்..

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வசித்து வருபவர் ஜான். இவரது மகள் மேரி. தனியார் கல்லூரி ஒன்றில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார் மேரி. மேரியின் தந்தை ஜான், நடத்தி வரும் நிறுவனத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த சுந்தரராஜபுரத்தில் வசித்து வரும் பேரின்பம் என்பவரது மகன் சூர்யா பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவும், மேரியும் காதலிக்க தொடங்கினர். இவர்களது காதலைத் தெரிந்து கொண்ட மேரியின் தந்தை, சூர்யாவை தனது நிறுவனத்தின் பணியில் இருந்து நீக்கி விட்டார். இந்நிலையில், மேரியும், சூர்யாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

மேரியின் தந்தை ஜான், சூர்யாவை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அச்சத்தில் புதுமணத் தம்பதியர் இருவரும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அத்துடன் புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.


பெற்றோர்களே எங்களை மிரட்டுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அத்துடன் ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிகழ்வு நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.