சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய்க்கு இன்று கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இப்போது அவர் இருக்கும் Range இல் இவரின் படங்கள் சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இவரது ரசிகர்களுக்கு இவர் எது செய்தாலும் பிடிக்கும்.
தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிறார்.
இந்தநிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி அன்று விஜயின் பிறந்தநாள் வருகிறது, அதை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்பது ரசிகர்களின் எண்ணம், ஆனால் விஜய் நாடு இருக்கும் நிலைமையில் அது வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார் ( நண்பர் அஜித் மாதிரி ) .
ஆனால் ஆன்லைனில் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால் இப்போதே காமன் dp, ஹேஸ்டேக் ட்ரெண்டிங் என களமாட ஆரம்பித்து விட்டனர் விஜய் ரசிகர்கள்.
இவரின் Common Dp யை கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால் மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டு உள்ளனர்.